Kadhal Oru Vizhiyil Song Lyrics in Tamil
காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே
நெருப்பினில் நனைந்திடுவேனா
உன் அனைபினில் எரிந்திடுவேனா
சிறகுகள் விரிதிடுவேனா
அந்த வானில் காதல் புரிய
உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய
நடு முதுகினில் ஊர்ந்து போகும்
உனதொரு விரல் எங்கு நகரும்
உன் பயணத்தில் தொலைதேன் நானே
என்னை நானே தேடுகிறேன்
உனதிதழ்களின் பாதங்கள்
என் மேனியில் நீ வைத்து செல்ல
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
என் இதயத்தில் முடிந்ததே
நெருப்பினில் நனைதிடுவேனா
உன் அணைப்பினில் எரிந்துடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய
பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வானம் போல
நீ என்னுள் விழுந்துவிடு
எதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையயை
நான் கேள்வி கேட்க்க
விடையளித்திட போகிறாய்
நீ கூறினால் என்ன ஆகுவேன்
உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய
காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே
Click here to know where to watch: